தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சபதம் வெற்றி பெற வேண்டி, திருச்செந்தூரில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும்வரை காலணி அணிய மாட்டேன் என சபதம் எடுத்துள்ள அண்ணாமலை, நேற்று முதல் 48 நாட்கள் விரதத்தையும் கடைபிடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது சபதம் நிறைவேற வேண்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதத்தைத் தொடங்கினர்.
அப்போது திமுக ஆட்சியை ஒழிப்போம் என முழக்கம் எழுப்பிக் கொண்டே அவர்கள் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனர்.