புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டதற்காக அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வு, வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டர் 94 ரூபாய் 26 காசாகவும், காரைக்காலில் 94 ரூபாய் 3 காசாகவும் உள்ளது. இதேபோல், டீசல் விலை புதுச்சேரியில் 84 ரூபாய் 48 காசாகவும், காரைக்காலில் 84 ரூபாய் 35 காசாகவும் இருக்கிறது.
தற்போது, மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும் என்று பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.