பணமில்லாத பொங்கல் பரிசுத்தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2025-ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பில்,குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மட்டுமே வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும், இலவச வேட்டி சேலைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.249.76 கோடி செலவு ஆகும் எனவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் பணமில்லாத பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிப்பால் பயனாளிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.