சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் சனி மகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த வருடத்தின் கடைசி பிரதோஷம் என்பதாலும், சனி மகா பிரதோஷம் என்பதாலும், தியாகராஜ சுவாமி, வடிவுடையம்மன் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நந்தி வாகனத்தில், பிரதோஷ நாயகரை சப்பரத்தில் வைத்து கோயில் உள்பிரகாரத்தில் ஊர்வலம் நடைபெற்றது. சனி பிரதோஷத்தில் பங்கேற்றால் கடன் மற்றும் நோய் நீங்கும் என்பதால், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
(ப்ரீத்)