சிவகாசியில் கோலாகலமாக நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தனர்.
அரையாண்டு மற்றும் வார விடுமுறையையொட்டி விருதுநகரில் “சுவையுடன் சிவகாசி” என்ற பெயரில் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் மற்றும் நாடுகளின் பிரபலமான உணவு வகைகள் இடம்பெற்றன.
திருவிழாவுக்கு வருகை தந்த ஏராளமான மக்கள், விதவிதமான உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். குழந்தைகளுக்கு ஓவியம் வரைதல், பாரம்பரிய மண்பானை செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
இதுதவிர பொழுதுபோக்கு அம்சமாக ஆடல் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம் பிடித்தன. ஒரே நாளில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.