மத்திய பிரதேசத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 10 வயது சிறுவன் 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டான்.
மத்தியப்பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தில் 140 அடி ஆழ ஆழ்துளை கிணறு அருகே, சுமீத் மீனா என்ற 10 வயது சிறுவன் நேற்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் நிலைதடுமாறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு, விரைந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இன்று காலை 9.30 மணி அளவில் சிறுவன் மீட்கப்பட்டான்.
சிறுவனுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அவனது உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். ஆழ்துளை கிணறு மூடாமல், திறந்து இருந்தது தான் விபத்துக்கு காரணம் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.