தமாக தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன், நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை ஜி.கே.வாச்ன சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாக தமாகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.