நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த 20 அடி நீளமுள்ள மலைப் பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
பந்தலூர் அருகே தனியார் தேயிலை தோட்டத்தில், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது செடிக்குள் மலைப் பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர், தேயிலைச் தோட்டத்தில் பதுங்கி இருந்த 20 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர், அடர்ந்த வனப் பகுதிக்குள் மலைப் பாம்பு விடப்பட்டது.