வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு மர்மநபர் மிரட்டல் விடுத்தார்.
உடனடியாக கோயிலுக்கு விரைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் தடயங்கள் ஏதும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இதையடுத்து மிரட்டல் விடுத்த நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.