நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே ஜல்லி லோடு ஏற்றி சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சீலாத்திகுளத்தில் உள்ள கல்குவாரியிலிருந்து ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு மார்த்தாண்டம் நோக்கி டாரஸ் லாரி ஒன்று புறப்பட்டது.
ராதாபுரம் அருகே அதிவேகமாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.