அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட ABVP அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து டெல்லியில் ஏபிவிபி அமைப்பினர் போராட்டாத்தில் ஈடுபட்டனர். மேலும் பொதிகை தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.