மகாராஷ்டிரா மாநிலம், நவி மும்பையில் புதிதாக கட்டப்படும் சர்வதேச விமான நிலையத்தில் சோதனை ஓட்டமாக தரையிறங்கிய முதல் விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது.
நவி மும்பையில் கட்டப்பட்டு வரும் 2வது சர்வதேச விமான நிலையம், ஏப்ரல் 17ஆம் தேதி திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான கட்டுமான பணிகளை அதானி குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், எக்ஸ் பக்கத்தில் அதானி குழுமம் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், தங்கள் குழுவின் கடின உழைப்புக்கு கிடைத்த பெருமிதம் என்றும், பங்குதாரர்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.