புதுச்சேரியில் சாலை விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. புதுச்சேரி பாவாணர் நகர் பகுதியை சேர்ந்த திவேஷ் என்ற சிறுவன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார்.
அரியாங்குப்பம் அருகே தனியார் பேருந்தை முந்துவதற்கு அவர் முயற்சி செய்த நிலையில், பேரிகார்டில் மோதி இருசக்கர வாகனம் கீழே விழுந்தது.
இதில் இருவர் மீதும் பேருந்து ஏறி இறங்கிய நிலையில், திவேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நண்பரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.