புத்தாண்டு கொண்டாட்டம்! - விதிகளை மீறும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
Nov 16, 2025, 03:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்! – விதிகளை மீறும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Dec 31, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகளை மீறும் நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்  என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றுக்கு வரும் வாகனங்கள் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும்.

அனைத்து நுழைவுவாயில்கள், நிகழ்ச்சி நடைபெறும், விருந்து நடைபெறும் பகுதி என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

வாகனங்களின் விவரங்கள் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்தப்பட வேண்டும்.

கேளிக்கை நிகழ்ச்சிக்காக தாற்காலிக மேடைகள் அமைக்கப்பட்டால், அந்த மேடையின் உறுதி தன்மைமையை உறுதி செய்ய பொதுப் பணித் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றின் தகுதிச் சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ, அருகிலோ மேடை அமைக்கக் கூடாது.

வாகனங்களை அந்தந்த ஹோட்டல்களின் வாகன நிறுத்துமிடத்திலேயே நிறுத்த வேண்டும், சாலைகளில் எந்த காரணம் கொண்டும் நிறுத்தக் கூடாது.

மதுபானங்களை அனுமதிக்கப்பட்ட மதுபானக் கூடத்திலேயே பரிமாற வேண்டும். 21 வயதுக் உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் வழங்கக்கூடாது.

காவல் துறையால் அளிக்கப்படும் நேரக் கட்டுப்பாடு கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும்.

கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதை தடுக்க போதுமான பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும், பெண் பாதுகாவலா்களை நியமிக்க வேண்டும்.

வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags: tn policeHappy New Year! - Police warning to star hotels that violate the rules!Happy New Year
ShareTweetSendShare
Previous Post

தமிழக காங்கிரஸ் எஸ்.சி. அணி தலைவர் ரஞ்சன் குமார் மீது வழக்குப்பதிவு!

Next Post

நக்சல் பாதித்த கிராமங்களில் அடிப்படை வசதிகள்! : துணை முதலமைச்சர் விஜய் சர்மா

Related News

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies