மேட்டுப்பாளையம்-உதகை சிறப்பு மலை ரயில் சேவை ஜனவரி 16ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்படுமென தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ஜனவரி 16 மற்றும் 18ஆம் தேதிகளிலும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு 17 மற்றும் 19ஆம் தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னூர்-உதகை இடையே ஜனவரி 16 முதல் 19 வரை நான்கு நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.