சிறுமலை அருகே தனியார் தோட்டத்தில் ஏர்கன் வைத்து சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள பெரிய மலையூர் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் 17 வயது மகன் அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். இருதினங்களுக்கு முன்பு தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது 10 வயது சிறுவன் ஏர்கன் வைத்து விளையாடி கொண்டிருந்தார்.
இருவரும் ஏர்கன் வைத்து விளையாடி கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் வயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த 17 வயது சிறுவனை தோட்ட தொழிலாளர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.