திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புத்தாண்டு மற்றும் பகல்பத்து உற்சவத்தையொட்டி, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
மார்கழி மாதம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பகல் பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் நடைபெறும். இந்நிலையில், 108 வைணவ திருத்தலங்களில், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் பகல் பத்து உற்சவம் நேற்று துவங்கியது. 2 -வது நாளான இன்று நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும், இன்று ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால், வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.