புத்தாண்டு கொண்டாட்டம் - சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Nov 16, 2025, 03:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம் – சுற்றுலா தளங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Web Desk by Web Desk
Jan 1, 2025, 05:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புத்தாண்டு தினத்தையொட்டி உதகை பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா தளத்தில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்களுக்கு மலர் கொடுத்து, இனிப்புகள் வழங்கி தோடர் பழங்குடியின மக்கள் வாழ்த்துகள் கூறி வரவேற்றனர்.

மேலும் இப்பகுதியில் உள்ள காமராஜர் அணை மற்றும் பைன் மரக்காடுகளை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

இதனிடையே கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்துள்ளதால் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்படும். அதன்படி, புத்தாண்டு தினத்தை ஒட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், குறைவான பயணிகளே வருகை தந்துள்ளதால், போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கொடைக்கானல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதேநேரம் கூட்டம் அதிகம் இல்லாததால் நட்சத்திர ஏரி, கோக்கஸ் வாக், பிரைன் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் பொழுதைக் கழித்து விடுமுறையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

புத்தாண்டு விடுமுறையையொட்டி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து சீராக உள்ளது. இந்நிலையில், விடுமுறை நாட்களையொட்டி தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். தொடர்ந்து குடும்பமாக அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் நேரத்தை செலவிட்டனர்.

Tags: ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்kodaikanalootynew year wishNew Year. 2025Happy New Year
ShareTweetSendShare
Previous Post

குடும்பத்தகராறு – 5 பேரை கொலை செய்த இளைஞர் கைது!

Next Post

ஆர்எஸ்எஸ் மூலம் சேவை மனப்பான்மையை ஆம் ஆத்மி கற்க வேண்டும் – சுதான்ஷு திரிவேதி அறிவுறுத்தல்!

Related News

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies