ஆர்எஸ்எஸ் மூலம் சேவை மனப்பான்மையை ஆம் ஆத்மி கட்சி கற்க வேண்டுமென பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி அறிவுறுத்தியுள்ளார்.
பாஜகவை விமர்சித்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, ஊடக கவனம் பெறுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கடிதம் எழுதியதாக விமர்சித்தார்.
மேலும், ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கடிதம் எழுதுவதை தவிர்த்து, அமைப்பின் சேவை மனப்பான்மையை ஆம் ஆத்மி கட்சி கற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.