சபரிமலை ஐயப்பன் கோயிலில் வனப்பகுதி வழியாக செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாஸ், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்து வருகின்றனர்.
இதனால், சன்னிதானத்தில் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.