மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு படத்தின் 2-ம் பாகம் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அதன் 2ஆம் பாகத்தை எடுக்கும் பணிகள் தொடங்கின. படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், வரும் மார்ச் மாதம் திரைப்படம் ரிலீஸாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில், ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.