அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் திமுக மகளிர் அணி அமைதியாக இருப்பது ஏன்? என பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக மகளிர் அணியை சேர்ந்த ஒருவர் கூட போராட முன்வரவில்லையே என்று தெரிவித்தார். சட்டத்தின் மீது பயம் வரும்வரை எதுவும் மாறாது என்றும், அதிகபட்ச தண்டனை கொடுக்காவிட்டால் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.
தமிழக அரசு பள்ளிகளை கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை என்றும், யூ-டியூபர்களின் எல்லை மீறிய பேச்சை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குஷ்பு கூறினார்.