தமிழக அரசு ஊழியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு 2023 – 2024ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு மூன்றாயிரம் ரூபாய் பொங்கல் போனஸாக வழங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.
தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டவுள்ளது.