பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு வழக்கில் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.