சீனாவில் வைரஸ் காய்ச்சல் தீயாக பரவி வருவதால் ஒருசில மாகாணங்களில் சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் 2019-ஆம் ஆண்டில் உருவான கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், சீனாவில் எச்.எம்.பி.வி. என்ற புதிய வகை வைரஸ் பரவி, பொதுமக்களை அச்சுறுத்துகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல், உடல் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுகின்றன. புதிய வகை வைரஸால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டதால், சீனாவில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நோய்த்தொற்றால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை என்றாலும், இந்தியர்கள் முக கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாள வேண்டுமென மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தினர்.