தஞ்சையில் நடைபெற்ற அரசு விழாவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது உதவியாளரை கடிந்து கொண்ட சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தஞ்சை மாவட்டம், மேலவஸ்தாசாவடியில் உள்ள தேசிய உணவுத் தொழில்நுட்ப வளாகத்தில், உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
விழாவில், பேசத் தொடங்கும்போது தனது உதவியாளர் எங்கே என்று கேட்ட அமைச்சர், “எருமை மாடா நீ?” என்று கேட்டு உதவியாளரை திட்டினார்.
உதவியாளர் ஓடிவந்து கொடுத்த பேப்பர் குறிப்பையும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தூக்கி எறிந்தார். இந்த சம்பவத்தால் அரசு விழாவில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.