மதுரையில் கைது செய்யப்பட்ட பாஜக மகளிர் அணியினரை, ஆட்டு மந்தைக்கு அருகே அடைத்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு மதுரையில் பாஜக மகளிர் அணியினர் தடையை மீறி பேரணி செல்ல முயன்றனர். அப்போது குஷ்பு உட்பட 400-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்த நிலையில், பாஜகவினரை தங்க வைத்த இடம் ஆடுகளை அடைத்து வைக்க கூடிய மந்தை என்ற புகார் எழுந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுகாதாரமான இடத்தில் தங்க வைக்காமல், போலீசார் வேண்டுமென்றே திட்டமிட்டு ஆட்டு மந்தை அருகே தங்க வைத்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.