பேரணி நடத்த முயன்ற பாஜக மகளிர் அணியினரை கைது செய்ததன் மூலம் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக பாஜக மாநில செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக நாளுக்குநாள் செல்வாக்கு இழந்து வருவதாக தெரிவித்தார். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக குற்றம்சாட்ய அவர், போதைப்பொருள் விற்றவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாகவும் கூறினார்.
போராட்டத்தில் பங்கேற்க வந்த பெண்களைக் கைது செய்தது ஏன்? என்றும், சுகாதாரமற்ற மண்டபத்தில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ’கூறினார்.