அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் சோதனை நடத்தினர்.
இதில் லேப்டாப் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஞானசேகரன் தனது செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை அந்த லேப்டாப்பிற்கு மாற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
















