உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற பாலமேடு, அவனியாபுரம் மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழாக்கள் பொங்கல் தினத்தன்று தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஜல்லிக்கட்டு விழா பணிகளை தொடங்க கடந்த 3-ம் தேதி முகூர்த்த கால் ஊன்றப்பட்டது.
இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் மற்றும் பார்வையாளர் மாடம் சுத்தம் செய்யப்பட்டு வர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு 950 காளைகள் கலந்து கொண்ட நிலையில், இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு காளைகள் களமிறங்க உள்ளன.