நாகை மாவட்ட தவெகவில் இருந்து நிர்வாகி ஒருவரை, பொதுச்செயலாளரின் ஒப்புதலின்றி மாவட்ட தலைவர் நீக்கியுள்ளார்.
நாகையை சேர்ந்த சேகர் என்பவர் திமுகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். அவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கட்சியில் தனித்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சேகரை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக தவெக மாவட்ட தலைவர் சுகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவெக பொதுச்செயலாளர் அறிவிப்பு வெளியிடாத நிலையில், மாவட்ட தலைவர் தன்னிச்சையாக செயல்பட்டு நிர்வாகியை வெளியேற்றிய சம்பவம் தவெகவினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.