திருப்பூரில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இந்து – கிறிஸ்தவ மதத்தினர் இணைந்து தேவாலயத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
குழந்தை இயேசுவை காண சென்ற மூன்று ராஜாக்களுக்கு இறை ஆசிர்வாதம் கிடைத்ததை கொண்டாடும் வகையில், திருப்பூர் குமரன் சாலையில் உள்ள புனித கத்ரீனம்மாள் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றது.
இதில் சிறுவர், சிறுமியர்கள் மூன்று ராஜாக்களின் வேடங்களை அணிந்து கலந்து கொண்டனர். அப்போது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இந்து – கிறிஸ்தவ மதத்தினர் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து உறியடி, லக்கி கார்னர், மியூசிக்கல் சேர் என பல்வேறு விதமான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.