மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி மறுத்ததை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள சிக்கந்தர் பாதுஷா சமாதியில் நேர்த்திக் கடன் செலுத்த போலீசார் அனுமதி மறுத்ததால், இஸ்லாமியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து எஸ்டிபிஐ மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் தடையை மீறி திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்ததால் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.