தேசிய கீதத்திற்கான மரியாதை மீட்டெடுப்பது உறுதி! - ஆளுநர் மாளிகை அறிக்கை
Aug 24, 2025, 05:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கீதத்திற்கான மரியாதை மீட்டெடுப்பது உறுதி! – ஆளுநர் மாளிகை அறிக்கை

Web Desk by Web Desk
Jan 6, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அரசியலமைப்பின் மேன்மையை போற்றவும் அனைத்து அரசு விழாக்களில்  தேசிய கீதத்திற்கான மரியாதையை மீட்டெடுக்கவும், தமிழ் மொழியின் பெருமையை நிலைநிறுத்தவும் ஆளுநர் ரவி தனது நிலைப்பாட்டில் உறுதிக்கொண்டுள்ளார் என ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு ஆளுநர் தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம், மரபுகள் மற்றும் பாரம்பரியத்தின் மீது தான் கொண்டுள்ள அசைக்க முடியாத மரியாதை மற்றும் போற்றுதலை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆளுநர் அவர்கள் ‘தமிழ்த் தாய் வாழ்த்து” பாடலின் புனிதத்தை எப்போதும் நிலைநாட்டி ஒவ்வொரு நிகழ்விலும் மரியாதையுடன் பாடி வருகிறார். உலகின் மிகப் பழமையான மற்றும் மிகவும் புகழ்பெற்ற தமிழ் மொழி, எண்ணற்ற இந்தியர்களின் இதயங்களில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.  ஆளுநர் இந்த புரிதல் உணர்வை முழு மனதுடன் பகிர்ந்து கொள்கிறார்.

மாநிலத்திலும் தேசிய அளவிலும் தமிழ் சுலாச்சாரம் மற்றும் தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு ஆளுநர் பல்வேறு வகையில் ஆதரவு அளித்து வருகிறார்.

அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து, அரசியல் சட்டக் கடமைகளைப் பின்பற்றுவது ஆளுநரின் கடமை. இந்திய நாட்டின் பெருமையான தேசிய கீதத்திற்கு மரியாதை அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமையாகும்.

இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் ஆளுநர் உரையின் தொடக்கம் மற்றும் முடிவில் தேசிய கீதம் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது.

தேசிய கீதத்திற்குரிய விதிமுறைகளின் படி இது அவசியமாகும். பலமுறை முன்கூட்டியே இதற்கான நினைவூட்டல்களை தெரிவித்த பிறகும் இந்தக் கோரிக்கைகளை வேண்டுமென்றே தமிழ்நாடு சட்டப்பேரவை புறக்கணித்துள்ளது துரதிருஷ்டவசமானது.

இன்று (06.01.2025), ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாமலோ, இசைக்கப்படாமலோ இருந்தபோதும், தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு கடமைகளை மரியாதையுடன் நினைவூட்டி,  முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை தலைவர் அவர்களை தேசிய கீதம்  இசைப்பதற்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரின் கோரிக்கை திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.

ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது அல்லது இசைக்காமல் இருப்பது அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இதனால் ஆளுநர் வேதனையுடன் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.

இந்திய அரசியலமைப்பின் மேன்மையை போற்றவும் அனைத்து அரசு விழாக்களில் தேசிய கீதத்திற்கான மரியாதையை மீட்டெடுக்கவும் மற்றும் தமிழ் மொழியின் பெருமையை நிலைநிறுத்தவும் தனது நிலைப்பாட்டில் ஆளுநர் உறுதிக்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Tags: tn governorRespect for the National Anthem is sure to be restored! - Governor House ReportRavi governor
ShareTweetSendShare
Previous Post

நக்சல்கள் நடத்திய தாக்குதலில் 9 CRPF வீரர்கள் வீர மரணம்!

Next Post

இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல! : ஆளுநர் மாளிகை

Related News

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies