நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த CRPF வீரர் உடலை சத்தீஸ்கர் முதலமைச்சர் சுமந்து சென்றார்.
பிஜாப்பூரின் தண்டேவாடாவில் கூட்டுப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பியபோது, பாதுகாப்புப் படையினரின் வாகனத்தை கண்ணிவெடி வைத்து நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இதில், 9 CRPF வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த நிலையில், உயிரிழந்த ராணு வீரர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், ராணுவ வீரர் உடலை சுமந்து சென்று வாகனத்தில் ஏற்றினார்.