துபாயில் நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக அறியப்படுபவர் அஜித்குமார். இவர் திரைப்படங்களை தாண்டி கார் ரேஸ், பைக் ரேஸ் உள்ளிடவற்றில் ஆர்வம் கொண்டவர். மேலும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆர்வத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் விடாமுயற்சி, GOOD BAD UGLY ஆகிய இரண்டு படங்களில் நடித்து வந்த அஜித்குமார் அவ்வப்போது கார் ரேஸ் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் துபாயில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நடிகர் அஜித்தின் ரேஸ் கார் விபத்தில் சிக்கியது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகர் அஜித்குமாருக்கு நல்வாய்பாக எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.