இஸ்ரோ தலைவராக நியமனம் - யார் இந்த வி.நாராயணன்? - சிறப்பு தொகுப்பு!
Oct 20, 2025, 12:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரோ தலைவராக நியமனம் – யார் இந்த வி.நாராயணன்? – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 8, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணனின் பின்னணியை தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த வி.நாராயணன், கரக்பூா் ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்தார்.

1984ஆம் ஆண்டு இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனத்தில் இணைந்த அவர், கடந்த 40 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார். இஸ்ரோவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த நாராயணன், ராக்கெட் மற்றும் விண்கல புரோபல்ஷன் பிரிவில் நிபுணத்துவம் வாய்ந்தவராக விளங்குகிறார்.

தொடக்கத்தில், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஆக்மென்டட் சேட்டிலைட் ஏவுதளம், துருவ செயற்கைக்கோள் ஏவுதளம் ஆகியவற்றில் திட உந்துவிசை பிரிவில் நாராயணன் பணியாற்றினார்.

மேலும், பிஎஸ்எல்வி சி57, ஆதித்யா எல்1, சி.இ.20 கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு, சந்திரயான் 2, சந்திரயான் 3 உள்ளிட்ட பல திட்டங்களில் அவர் முக்கிய பங்களிப்பாற்றியுள்ளார். நாராயணன் தலைமையிலான குழு, இஸ்ரோவின் பல்வேறு திட்டங்களுக்கு 183 திரவ உந்துவிசை திட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வழங்கியுள்ளது.

உலகிலேயே 6 நாடுகளில் மட்டும்தான் காம்ப்ளக்ஸ் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கிரையோஜெனிக் அமைப்பு உள்ளது. இந்த பட்டியிலில் இந்தியாவும் இடம்பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தவர் வி.நாராயணன்.

2017ஆம் ஆண்டு முதல் 2037ம் ஆண்டு வரை இஸ்ரோவின் புரோபல்ஷன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் அவர்தான் இறுதி செய்துள்ளார். விண்வெளித்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக, ஐஐடி கரக்பூரின் வெள்ளிப் பதக்கம், இந்திய விண்வெளி சங்கத்தின் தங்கப்பதக்கம், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தேசிய வடிவமைப்பு விருது உள்ளிட்டவற்றை நாராயணன் பெற்றுள்ளார்.

தற்போது அவரின் பணியை பாராட்டி, இஸ்ரோவின் தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.

Tags: ndian Space Research OrganizationIIT Kharagpur.spacecraft propulsion department.Augmented Satellite Launch CenterPolar Satellite Launch CenterVikram Sarabhai Space Center.kumariISRO Chairmannew Chairman of ISRO.V. Narayanan
ShareTweetSendShare
Previous Post

பொறுப்பற்ற முறையில் பேசுவதை ஆ.ராசா நிறுத்திக்கொள்ள வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

Next Post

பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி – நேரலை செய்யாமல் இருட்டடிப்பு செய்ததாக குற்றச்சாட்டு!

Related News

தீபாவளி பண்டிகை – தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

சர்ச்சையை கிளப்பிய யூசுப் பதான் பதிவு : ஆதீனா மசூதியா? – ஆதிநாத் கோயிலா?

தீபாவளி பண்டிகை – குடியரசு தலைவர் திரௌதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதித்த கர்நாடக அரசு – நீதிமன்றம் அனுமதி : சிறப்பு தொகுப்பு!

சென்னையில் போக்குவரத்து காவலர் தாக்கப்பட்ட விவகாரம் – காங்.எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

இந்தியப் பொருட்களை வாங்கி, சுதேசி என்று பெருமையுடன் சொல்லுங்கள் : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

ஒற்றுமையாக ஏற்றும் தீபங்கள், நம் பாரத தேசத்தை மிளிரச் செய்யட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு”!

இருள் அகன்று, ஒளி பெருகட்டும் – அண்ணாமலை வாழ்த்து!

அனைவரது வாழ்விலும் துன்பம் அகன்று இன்பமான சூழல் ஒளி பெறட்டும் – எல்.முருகன் வாழ்த்து!

தீபாவளி பண்டிகை : மக்களின் மனம் கவர்ந்த “மாப்பிள்ளை சம்பா முறுக்கு” – சிறப்பு தொகுப்பு!

மாநிலங்கள், நாடுகள் கடந்த தீபாவளி பண்டிகை – ஆச்சரியமூட்டும் ரகசியங்கள்!

தீபாவளி பண்டிகை கோலாகலம் – லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்!

தீபாவளி வழிபாட்டில் இந்த பூஜை முக்கியம்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies