கணீர் குரல் கம்பீரம் : சீர்காழி கோவிந்தராஜன் ஒரு துருவ நட்சத்திரம் - சிறப்பு தொகுப்பு!
Sep 10, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கணீர் குரல் கம்பீரம் : சீர்காழி கோவிந்தராஜன் ஒரு துருவ நட்சத்திரம் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 9, 2025, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கணீர்க் குரலால் அனைவரையும் கவர்ந்த கர்நாடக சங்கீத கலைஞர் சீர்காழி கோவிந்தராஜன். தமிழ்த் திரைவானிலும் ஒரு துருவ நட்சத்திரம். இசையுலகில் நிலைத்த புகழோடு விளங்கும் அந்த உத்தமக் கலைஞர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஊழிதோறும் இருக்கும் ஊர் என்ற பெருமையுடைய சீர்காழி தான், தமிழிசையின் தோற்றுவாய் நகரமாகும். 7ஆம் நூற்றாண்டில், பார்வதியம்மையிடம் ஞானப்பால் உண்ட 3 வயதான குழந்தை, திருஞான சம்பந்தராகி, தமிழையும், தமிழிசையும் மீட்டெடுத்தது.

சீர்காழி மூவர் என்று போற்றப்படும் அருணாசலக்கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரும், தமிழிசைக்குச் செய்த தொண்டு அளப்பரியதாகும். இத்தனை பெருமை வாய்ந்த சீர்காழியிலிருந்து தமிழிசைக்குக் கிடைத்த இன்னொரு வரம் தான் சீர்காழி கோவிந்தராஜன்.

1933ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி சீர்காழியில், சிவசிதம்பரம்-அவையம்பாள் தம்பதியருக்குத் திருமகனாக கோவிந்தராஜன் பிறந்தார். இசை ஆர்வம்மிக்க கோவிந்தராஜன், சிறுவயதிலேயே இசைப்பள்ளியில் சேர்ந்து முறையாக சங்கீதம் கற்று கொண்டார்.

நாடகக்குழு நடத்தி வந்த சீர்காழியின் தாய் மாமன் எஸ்.பி.கிருஷ்ணன் மூலமாகவே நடிக்கும் ஆசையும் சீர்காழிக்கு ஏற்பட்டது. தேவி நாடக சபாவில் சேர்ந்து மாத சம்பளத்துக்கு நாடகத்தில் நடித்து வந்தார் சீர்காழி. பி. எஸ் .செட்டியார் என்பவர் தான் சீர்காழி கோவிந்தராஜனைத் திரையுலகுக்கு அழைத்து வந்தார்.

முதலில் மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்த சீர்காழி கோவிந்தராஜன்,1949 ஆம் ஆண்டு, சென்னை இசைக் கல்லூரியில் இசைமணி பட்டம் பெற்றார். தொடர்ந்து, சங்கீத வித்வான் பட்டமும் பெற்றார். திருப்பாம்புரம் சுவாமிநாத ஐயரிடம் கர்நாடக சங்கீதத்தை முழுமையாக கற்றுணர்ந்தார்.

நடிப்பதிலேயே ஆர்வம் காட்டிவந்த சீர்காழிக்கு, “யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் யாராலும் உன்னைப் போல் பாட முடியாது என்றும், நடிப்பை விட இசையில் கவனம் செலுத்து என்றும், சங்கீதச் சக்கரவர்த்தியான இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன் அறிவுறுத்தினார். அப்போது தான், இசை தான் தம் பாதை என்பதைச் சீர்காழி தீர்மானம் செய்தார்.

1954 ஆண்டு வெளியான பொன்வயல் படத்தில் இடம்பெற்ற சிரிப்புதான் வருகுதைய்யா பாடல்தான் சீர்காழி சினிமாவுக்காக பாடிய முதல் பாடலாகும். இசையோடு இணைந்த நாதமாக குரல் ஒலிக்க வேண்டும் என்ற கருத்து நிலவிய காலத்தில், தனது வெண்கலக் குரலால் அதனை மாற்றி எழுதினார் சீர்காழி கோவிந்தராஜன்.

நகைச்சுவையாகட்டும், காதலாகட்டும் ,வீரமாகட்டும் , கேலியாகட்டும், சோகமாகட்டும், தன்னம்பிக்கை ஆகட்டும்,தத்துவமாகட்டும், தேசியமாகட்டும், சீர்காழி குரலில், அவை சாகா வரம் பெற்ற பாடல்களாகி விடுகின்றன.

குறிப்பாக , உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில், ‘நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்’ என்ற பாடல் இன்றைக்கும் பலருக்குப் புத்துணர்ச்சி தருகிற பாடலாகும்.

திரை இசையில் மட்டுமில்லாமல், ஆன்மிக இசையிலும் சீர்காழி முத்திரை பதித்திருக்கிறார். விநாயகனே வினை தீர்ப்பவனே, திருச்செந்தூரின் கடலோரத்தில், ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா, நீ அல்லால் தெய்வமில்லை, சின்னஞ்சிறு பெண்போலே, ஆகிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

1963 ஆம் ஆண்டு, நடராஜர் தரிசனம் என்ற படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் நந்தனராக நடித்தார். ஆனால், அந்தப் படம் வெளியாகவில்லை. பிறகு 1967ம் ஆண்டில் வெளியான கந்தன் கருணை திரைப்படத்தில், நக்கீரராக சீர்காழி நடித்திருந்தார். இதுவே சீர்காழி நடித்த முதல் படமாகும்.

இதனைத் தொடர்ந்து திருமலை தென்குமரி, அகத்தியர், ராஜராஜ சோழன், தசாவதாரம், மீனாட்சி திருவிளையாடல் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் ஔவையார் என்றால் எப்படிக் கே.பி. சுந்தராம்பாள் நினைவுக்கு வருவாரோ, அதேபோன்று அகத்தியர் என்றால் சீர்காழி கோவிந்தராஜனே நினைவுக்கு வருவார்.

8000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள சீர்காழி, 1988ம் ஆண்டு, தனது 55 வயதில், மரணமடைந்தார். பக்தியும் தமிழும் இசையும் இருக்கும் வரை, சீர்காழியின் குரல் காற்றில் நிலைத்திருக்கும்.

Tags: Devi Natak SabhaThirupampampuram Swaminatha Iyer.sirkazhiCarnatic musician Sirkazhi GovindarajanSirkazhi GovindarajanTamil music.
ShareTweetSendShare
Previous Post

சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து கிராம மக்களை காப்பாற்றிய இளைஞர் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சென்னையில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

Related News

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies