சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத் தலைவர் பாரதி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மீது தமிழக அரசு அக்கறை காட்டவில்லை என தெரிவித்தார். விலையை உயர்த்தி மக்களை வரவிடாமல் தமிழக அரசு தடுக்கிறது என்றும், வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் இல்லை எனவும் கூறினார். மேலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் எனவும் தெரிவித்தார்.