உலகத்தரத்தில் பயன்பாட்டிற்கு வரும் பள பள சாலைகள் - சிறப்பு தொகுப்பு!
Aug 19, 2025, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகத்தரத்தில் பயன்பாட்டிற்கு வரும் பள பள சாலைகள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025ம் ஆண்டு இந்தியாவின் சாலை உள்கட்டமைப்புத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமையப் போகிறது. குறிப்பாக, மூன்று முக்கிய அதிவேக விரைவு நெடுஞ்சாலைகள் இந்த ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சிறந்த உள்கட்டமைப்பு என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாகும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, தேசிய நெடுஞ்சாலைகள், வந்தே பாரத் ரயில்கள், புதிய விமான நிலையங்கள், நவீன துறைமுகங்கள் என சிறந்த உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகிறது.

திட்டங்கள் வெறும் காகிதத்தில் மட்டும் இல்லாமல், திட்டமிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில், டெல்லி-மும்பை, பெங்களூரு-சென்னை மற்றும் டெல்லி-டேராடூன் ஆகிய மூன்று முக்கிய அதிவேக விரைவு நெடுஞ்சாலை பணிகள் நிறைவுக்கு வந்துள்ளன.

டெல்லி-மும்பை அதிவேக விரைவு நெடுஞ்சாலை, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களை இணைக்கிறது. 1.03 லட்சம் கோடி ரூபாய் செலவில் 1,386 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த நெடுஞ்சாலை அமைக்கப் பட்டுள்ளது. நாட்டின் மிக நீளமான விரைவு நெடுஞ்சாலை இதுவாகும்.

மேலும், விரைவு சாலையின் ஒரு வழித்தடம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்காக ஒதுக்கப்பட உள்ளது. இதுவே நாட்டின் முதல் இ-சாலை ஆகும். 8 வழி சாலையாக அமைக்கப்படும் இந்த விரைவு சாலையை 12 வழிசாலையாக விரிவுபடுத்தவும் இடம் தரப்பட்டுள்ளது.

இந்த விரைவு நெடுஞ்சாலை டெல்லி- மும்பை இடையேயான பயண நேரத்தை 50 சதவீதம் குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் தளவாடச் செலவை 16 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைப்பதே இந்த விரைவு நெடுஞ்சாலை திட்டத்தின் நோக்கமாகும். அடுத்தபடியாக, பெங்களூரு-சென்னை விரைவு நெடுஞ்சாலை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையிலான இந்த விரைவு நெடுஞ்சாலை 260 கிலோமீட்டர் துாரமாகும். இந்த சாலையை எட்டு வழிச்சாலையாக விரிவுபடுத்த வசதியாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

17,900 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடக்கும் இந்த சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும் போது, சென்னை -பெங்களூரு இடையேயான 6 மணி நேர பயணம், 3 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக, டெல்லி-டேராடூன் விரைவு நெடுஞ்சாலை இன்னும் 3 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

13,000 கோடி ரூபாய் மதிப்பில் டெல்லி – சஹாரான்பூர் – டேராடூன் விரைவு நெடுஞ்சாலை 210 கிலோமீட்டர் தூரத்துக்குச் செல்கிறது. டெல்லி-டேராடூன் இடையேயான ஆறு மணி நேர பயண நேரத்தை இரண்டு மணி நேரமாக இந்த விரைவு நெடுஞ்சாலை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த விரைவு நெடுஞ்சாலைகள் எல்லாம் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். இந்த அதிநவீன நெடுஞ்சாலைகள் அனைவருக்கும் விரைவான, பாதுகாப்பான மற்றும் திறமையான பயணத்துக்கு உத்தரவாதம் தருகின்றன.

பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி உறுதிப்படுத்தப் படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் உள்கட்டமைப்புக்காக பெரும் தொகை முதலீடு செய்யப் படுகின்றன. சாலை வசதி மேம்படும்போது வர்த்தகம் பெருகுகிறது. வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது.

குறிப்பாக அனைவருக்கும் விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை இந்த விரைவு நெடுஞ்சாலைகள் உறுதிப்படுத்துகின்றன. அடுத்த ஆண்டுக்குள், அமெரிக்காவை விடவும் உயர்ந்த தரத்தில் இந்திய நெடுஞ்சாலைகள் இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags: three major expresswaysroad infrastructureDelhi-Mumbai ExpresswayBengaluru-Chennai ExpresswayDelhi-Dehradun ExpresswayIndiaprime minister modieconomic development
ShareTweetSendShare
Previous Post

கனடாவின் அடுத்த பிரதமர்? : இந்திய வம்சாவளியின் சந்திரா ஆர்யா போட்டி

Next Post

பாகிஸ்தானுக்கு “செக்” இந்தியாவின் நட்பை நாடும் தாலிபான் அரசு

Related News

உலகிலேயே சிறந்த நாடாக இந்தியா விளங்குகிறது : அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம்!

ஓமன் : புழுதி புயலால் மக்கள் மிகுந்த சிரமம்!

கர்நாடகா : ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – எதிர்கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய தலைவர்களுடன் சந்திப்பு : புதினிடம் எடுத்துரைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய சிவகங்கை ராணுவ வீரருக்கு தங்கப் பதக்கம்!

ஜிஎஸ்டி சீர்திருத்த திட்டங்கள் – மாநில அமைச்சர்கள் குழுவிடம் நாளை ஆலோசனை நடத்துகிறார் நிர்மலா சீதாராமன்!

கிருஷ்ணகிரி : ஆம்னி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!

ஆசிய கோப்பை தொடருக்கான ப்ரோமோ வெளியீடு!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies