திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில், மாவட்டத்திலிருந்து 60 -க்கும் மேற்பட்ட அணிகளும், 700-க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர்.
இதில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற அணிகளில் இருந்து சிறந்த 12 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, சேலத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.