இலங்கையில் பட்டப்பகலில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாயனது.
இலங்கையின் கம்பளை மாவட்டம், தவுலகல பகுதியில் பள்ளி மாணவியை மர்மநபர்கள் வேனில் கடத்தி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடி வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமாரக்களை ஆய்வு செய்தபோது பொலன்னறுவை பகுதியில் சிறுமி கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், சிறுமியை கடத்தி சென்ற வேனை பறிமுதல் செய்தனர். மேலும், வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறுமியை அவரது உறவினரே கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், சிறுமி கடத்தி செல்லப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.