இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் எட்டு பேருக்கு வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் சென்ற 8 மீனவர்கள் தலைமன்னாருக்கு வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், களஞ்சியம், முனீஸ்வரன், கார்மேகம், கண்ணன், பிரிஸ்மன், மரிய ஜான் ரெமோரா, பிரியன், சவேரியார் அடிமை ஆகிய 8 மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்தனர்.
இந்நிலையில் கைதான மீனவர்கள் இலங்கை கிளி நொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு வரும் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.