இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடர்வதற்கு ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரை ரோகித் சர்மா நேரில் சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவின் தொடர் தோல்வி குறித்து அஜித் அகர்கரிடம் ரோகித் சர்மா விளக்கமளித்தார்.
தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை தேர்வு செய்யும் வரை தானே கேப்டனாக தொடர்வதற்கு ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.