சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மகளிர் வார்டில் புகுந்து நோயாளியிடம் அத்துமீறிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மதுபோதையில் உறங்கி கொண்டிருந்த இளைஞர், அதிகாலை மகளிர் வார்டில் புகுந்து நோயாளிகளிடம் அத்துமீறியுள்ளார்.
உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த ஊழியர்கள் மதுபோதை இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதனை தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மதுபோதையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த இளைஞர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.