திருப்பதி ஏழுமலையான் கோயிலில், லட்டு விநியோக மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், லட்டு விநியோகம் செய்யும் கவுண்டரில் திடீரென தீ விபத்து நேரிட்டது.
லட்டு விநியோக வளாகத்தில் உள்ள 47ம் எண் கவுண்டரில் யு.பி.எஸ்.-ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கவுண்டரில் இருந்து கரும்புகை வெளிவருவதை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து வந்த தேவஸ்தான அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.