திருச்செந்தூர் கடற்கரையில் ஏற்பட்ட கடல் அரிப்பு காரணமாக பழமையான சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 2 வாரத்திற்கும் மேலாக திருச்செந்தூரில் கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் நீராட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் முனிவர் சிலை மற்றும் நாகலிங்க சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.