திருப்பூர் பெரியகடை வீதியில் உள்ள ரேஷன் கடைக்கு, பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து பொங்கல் தொகுப்பு வாங்க வந்த வீடியோ வைரலாகி வருகிறது.
50-வது வார்டுக்கு உட்பட்ட பெரியகடை வீதியில் உள்ள ரேஷன் கடையின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. கட்டத்தை புதுப்பித்து தர கோரிக்கை மவைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், தங்கள் பாதுகாப்பு கருதி தலைக்கவசத்துடன் வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.