நீலகிரியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோயிலில் 114ம் ஆண்டு ஆருத்ரா மஹோத்ஸவ தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
உதகை ஃபென் ஹில் பகுதியில் அமைந்துள்ள பவானீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா புகழ்பெற்றதாகும்.. இந்த ஆண்டுக்கான 114-வது ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வடம்பிடித்து இழுத்து துவங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, தோடர் பழங்குடியின மக்கள் நடனமாடி தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். பழங்குடியின மக்கள் பாரம்பரிய உடையணிந்து நடனமாடியது காண்போரின் கண்களை கவர்ந்தது.