"வழக்கமான அரசியல் வாதி அல்ல" : PODCAST நிகழ்ச்சியில் மனம் திறந்த பிரதமர் மோடி!
Jul 24, 2025, 03:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“வழக்கமான அரசியல் வாதி அல்ல” : PODCAST நிகழ்ச்சியில் மனம் திறந்த பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 14, 2025, 09:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபலமான ஜெரோதா நிறுவனத்தின் PODCAST நிகழ்ச்சியில், முதன் முறையாக பங்கேற்ற பிரதமர் மோடி, வழக்கத்துக்கு மாறாக தனது அரசியல் பயணம் பற்றியும், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அனைத்து உலக நாடுகளின் தலைவர்களாலும் போற்றப்படும் பிரதமர் மோடியை, ஜெரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் பேட்டி எடுத்திருக்கிறார். சுமார் 2 மணி நேரம் நடந்த அந்த உரையாடலின் வீடியோ கடந்த வெள்ளிக் கிழமை PODCAST நிகழ்ச்சியில் வெளியானது.

‘தேசம் முதலில்’ என்பதே எல்லோருக்கும் முக்கிய குறியீடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, தனது வழிகாட்டும் கொள்கைகள் மற்றும் இந்திய அரசியலின் எதிர்காலம் குறித்தும் பல அரிய பார்வைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.

“வழக்கமான அரசியல்வாதி அல்ல” என்று தன்னை விவரித்த பிரதமர் மோடி, அரசியல் செயல்பாடுகளை விட ஆட்சி செய்வதில் தான் தனது முதன்மை கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் அரசியல்வாதி ஆகவில்லை என்று கூறிய பிரதமர் மோடி, யாராவது அரசியலில் வர விரும்பினால், குறிக்கோள் மட்டும் இருந்தால் போதாது என்றும், ஒரு நோக்கத்துடனும் ,சரியான திட்டத்துடனும் வர வேண்டும் என்றும் விளக்கியிருக்கிறார்.

மேலும், தான் குஜராத்தின் முதல்வராக பதவியேற்றபோது, ​​மூன்று உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

எடுக்கும் முயற்சிகளில் எந்தக் கல்லையும் விட்டுவிட மாட்டேன் என்றும், தனக்காக எதையும் செய்ய மாட்டேன் என்றும், கெட்ட நோக்கத்துடன் தவறு செய்ய மாட்டேன் என்றும் தான் எடுத்துக் கொண்ட கொள்கைகளே தனது வாழ்க்கையின் தாரக மந்திரமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

பொறுப்புகளை திறம்பட கையாளக்கூடிய ஒரு திறமையான குழுவைத் கட்டமைப்பதன் மூலம் தனது வெற்றியை அளவிடுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, எப்போதும், அடுத்த 20 ஆண்டுகளுக்கான பணியை செய்ய ஒரு அணியை தயார்படுத்துவதைத் தொடர விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

“குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” என்பது அமைச்சகங்கள் அல்லது ஊழியர்களைக் குறைப்பது அல்ல என்றும், மாறாக செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதைக் குறிக்கிறது என்பதையும் இந்த உரையாடல் மூலம் பிரதமர் மோடி, தெளிவுபடுத்தி யிருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மூன்றாவது நாளில் கோத்ரா கலவரம் நடந்தது என்று கூறிய பிரதமர் மோடி, ஒரே நாளில் ஐந்து இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன என்றும், ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர் மட்டுமே இருந்ததால், முதல்வரை அழைத்து செல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும், என்ன நடந்தாலும் அதற்கு தான் பொறுப்பு என வாதிட்டு, உடனடியாக கோத்ராவுக்குச் சென்றதாகவும், விவரித்திருக்கிறார்.

அமெரிக்காவால் விசா மறுக்கப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, விசா மறுப்பை, ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், நாட்டுக்கும் அவமரியாதையாக உணர்ந்ததாகவும், அதனால், இந்திய விசாவுக்காக உலகம் வரிசையில் காத்து நிற்கும் காலம் வருமென்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாகவும் விவரித்தார். விசா மறுக்கப்பட்டு 20 ஆண்டுகளான நிலையில், தற்போது இந்தியாவின் நேரம் தொடங்கிவிட்டதை காண முடிகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

மோடி 3.0 யில் தனது கனவுகள் விரிவடைந்துள்ளதாகவும், 2047 ஆம் ஆண்டுக்குள் “விக்சித் பாரதம்” என்ற அமைப்பை உருவாக்குவதே இலட்சியமாக உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

தனது பள்ளி பருவ காலங்களை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, தேர்ச்சி பெறுவதற்காகப் படித்த ஒரு சாதாரண மாணவராகவும், ஏட்டுக் கல்விக்கு அப்பால் செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதாகவும் விவரித்திருக்கிறார்.

தனது வாழ்க்கைப் போராட்டங்களே தனது “பல்கலைக்கழகம்” என்று பாராட்டிய பிரதமர் மோடி, குடும்பத்தில் நிதி நெருக்கடி காரணமாக, ராணுவப் பள்ளியில் சேர முடியாமல் போனாலும், மன உறுதியை இழக்கவில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறார்.

வசதியான, சுகமான வாழ்க்கையை தான் வாழாதது தன் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ள பிரதமர் மோடி, அதனால் தான் எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அறிந்துகொள்ள முடிந்தது என்றும், அதனால்தான், தன் வாழ்க்கையில் நடந்த சிறிய விஷயங்கள் கூட தனக்கு திருப்தியைத் தருகின்றன என்று பெருமிதமாக கூறியிருக்கிறார்.

பாட்காஸ்டின் டிரெய்லரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, உங்களுக்காக இதை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ந்ததைப் போலவே நீங்கள் அனைவரும் இதை ரசிப்பீர்கள் என்று நம்புவதாக எழுதியிருந்தார். உண்மையில், ரசிக்க மட்டுமல்ல, பிரதமர் மோடியை எண்ணி பெருமை கொள்ளவும் வைத்திருக்கிறது என்று மக்கள் பாராட்டுகிறார்கள்.

Tags: pm modi nikhil kamathpm modi speechpm modi debut podcastpm modi livenikhil kamath podcast with pm narendra modipm modi podcastpm modi interview with nikhil kamathpm modi podcast with nikhil kamathmodi nikhil kamathpm modi and nikhil kamathpodcast of pm modinikhil kamath pm modi podcastnikhil kamath and pm modipm modi nikhil kamath podcast interviewPM Modipm modi first podcastNarendra Modipodcast with pm modipm narendra modi
ShareTweetSendShare
Previous Post

சீனாவை சமாளிக்க தயார்! : லடாக்கில் புதிய வியூகங்கள் இந்திய ராணுவம் அதிரடி!

Next Post

கால்நடைகளுக்கு நன்றி சொல்வோம்! – அண்ணாமலை மாட்டுப் பொங்கல் வாழ்த்து!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies